கவிதைக்களம்

Friday, October 22, 2010

ஒரு ஏழைக்கு உணவளிதேன்

ஒரு ஏழைக்கு உணவளிதேன்

உலக நாடுகள்
வறுமையை ஒழிக்க
மூளையை கசுக்கி 

திட்டம்  தீட்டும்
நேரத்தில்....
ஒரு ஏழைக்கு உணவளிதேன்
திட்டம் நிறைவேறும் வரை,
அவன் பிழைத்திருக்க.....

Friday, September 3, 2010

என் நாற்பது கோடி மக்கள்.....????

  என் நாற்பது கோடி மக்கள்.....????

மூன்று வேலை முழு நேரம் தின்றும் 
எச்சில் ஊரும் வாயில், பசி நேரம் வந்தால்.
மூன்று வேலை முழு வாழ்வும் கொடுத்து 
எச்சில்கும் வழி இல்லை, வருமையை தின்றால்.
என் நாற்பது கோடி மக்கள் 
பசி தீர்க்கும் நாள் என்றோ.........?????????
அன்று  சொல் நீ இந்தியன் என்று.



 

Sunday, February 14, 2010

எது அற்புதம்....!



எது அற்புதம்....!

உலகில் மிக அற்புதமான விஷயம் எல்லாம்
மிக சாதரணமாக கிடைக்கும் .
ஆனால் அதை நாம் மிக அற்பமாக பார்ப்பதால்
அதன் அற்புதத்தை பார்ப்பதில்லை ...!

Saturday, January 2, 2010

சிந்தனை...

முட்டாள் : "வாழும்போது  கொஞ்சம் சந்தோஷமாக இருக்கலாம் "
புத்திசாலி : "சந்தோஷமாக இருக்கும் போது  கொஞ்சம் வாழலாம்."

ஞானம்....

ஞானம்....

உடலின்  
தியானம்
தூக்கும்.
மனதின்
தியானம்
ஞானம்....

Thursday, December 10, 2009

வருமை....

வருமை....

" மட்டன்   பிரியாணி - 10  plate ,
    சிக்கன் 65 - 4 plate ,
   மீன் வறுவல் - 3 plate ,
   எரா - 2 plate ,
   ஆட்டுகால்  சூப் - 3 கப்."
  இத்தனையும் வேலை செய்யும்
  ஏழை சிறுவனிடம் PARCEL கேட்டேன்.
  

பூமி...

பூமி

இயற்கையின் தாய்...
இவளிடம் தான் தவழ்கிறோம்
வளர்ந்தபின்.......!
அவள் காட்டிய அன்பை
பட்டா போட்டு  பதிவு செய்கிறோம்......?
உண்மையான விலையை  இவள் கேட்டால்
மனித இனமே பிச்சை எடுக்க வேண்டும்.